கரீபியன் தீவுகள் அருகே விமான விபத்தில் ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் பலி

0 1304

கரிபியன் தீவுகள் அருகே நடுக்கடலில் பறந்தபோது நேரிட்ட விமான விபத்தில் ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர், அவரது 2 மகள்கள் மற்றும் விமானி உட்பட 4 பேரும் உயிரிழந்தனர்.

தி குட் ஜெர்மன், ஸ்பீட் ரேசர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான கிறிஸ்டியன் ஆலிவர், தமது மகள்கள் மடிதா மற்றும் அன்னிக் ஆகியோருடன் ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானத்தில் பயணித்தபோது விபத்தில் சிக்கினார்.

தகவல் கிடைத்த கடலோர காவல் படையினர் மற்றும் மீனவர்கள் படகுகளில் விரைந்து சென்ற போதிலும் 4 பேரின் உடல்களை மட்டுமே மீட்க முடிந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments