தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி... 3ஆம் சுற்று வரை சுமார் 200 காளைகள் களம் கண்டது
புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், 15க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
மூன்றாவது சுற்று தொடங்கியுள்ள நிலையில் சுமார் 200 காளைகள் களம் இறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு முதல் உதவி அளிக்கப்பட்டு புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
Comments