புட்டு மாதிரி இருக்கு.. அள்ளுங்க ஆய்வில் ஷாக்கான எம்.எல்.ஏக்கள் தரமற்ற கான்கிரீட்டால் அதிர்ச்சி..! கழிவறையில் எச்.எம்க்கு எச்சரிக்கை

0 1256

கடலூர் செம்மண்டலம் ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதிக்காக 5 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ள கட்டடம் தரமற்ற முறையில் கட்டப்படுவதை கண்டுபிடித்த  எம்.எல்.ஏக்கள் , புட்டு மாதிரி காணப்பட்ட கான்கிரீட் கலவையை ஆய்வுக்காக பையில் போட்டு அள்ளிச்சென்றனர்

பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறையை பராமரிக்காமல் வைத்திருந்ததாக தலைமை ஆசிரியரை, அரசு மதிப்பீட்டு குழு தலைவர் சாக்கோட்டை அன்பழகன் கடிந்து கொண்ட காட்சிகள் தான் இவை..!

கடலூர் மாவட்டத்திற்கு அரசு மதிப்பீட்டு குழு தலைவர் சாக்கோட்டை அன்பழகன் எம்.எல்.ஏ தலைமையில் உறுப்பினர்கள் சந்திரன், சிந்தனைச் செல்வன், சிவக்குமார், சேவூர் ராமச்சந்திரன், பரந்தாமன் ஆகியோர் ஆய்வுக்கு சென்றனர். கடலூர் செம்மண்டலத்தில் ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதிக்காக 5.11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது கடலூர் திமுக எம்எல்ஏ அய்யப்பன் திடீரென்று தாட்கோ அதிகாரிகளிடம் இந்த கட்டிடம் கட்டுப்பணி எப்போது தொடங்கப்பட்டது ? எம்எல்ஏ என்ற முறையில் எனக்கு யாரும் தகவலே தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்

இதனை தொடர்ந்து மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன் , எப்படி எம்எல்ஏ விற்கு தகவல் தெரிவிக்காமல் பணியை தொடங்கினீர்கள்? என கேள்வி எழுப்பினர். மேலும் கட்டுமான பணிகள் தரமாக நடக்கிறதா ? என்று எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது என தெரிவித்து நேரடியாக பார்வையிட்டார்

கட்டிடத்தின் அஸ்திவாரத்திற்காக போடப்பட்டிருந்த கான்கிரீட் கலவை தரமாக உள்ளதா? என்பதை தொட்டு பார்த்த போது அது புட்டு போல உதிர்ந்ததால் அதனை , கரண்டியில் அள்ளி பையில் போட்டு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தின் போது இதனுடைய தரம் குறித்து உடனடியாக தெரிவிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

அதே போல கடலூர் பீச் ரோடு மாநகராட்சி மேல் நிலைபள்ளியின் கழிவறையை பார்வையிட்ட அன்பழகன், தலைமை ஆசிரியரை நோக்கி இந்த கழிவறையில் நீங்க போவீங்களா ? மாணவர்கள் என்றால் இளக்காரமா என்று கேட்டு திடுக்கிட வைத்தார்

இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க தவறிய மாநகராட்சி அதிகாரிகளையும் அன்பழகன் கடிந்து கொண்டார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments