காவல்நிலைய அதிகாரிகள் முதல் டிஜிபி வரை தொழில்நுட்பம் மற்றும் புதிய குற்றவியல் சட்டங்களைத் தெரிந்துக் கொள்ளவும்: அமித் ஷா வலியுறுத்தல்
காவல்நிலைய அதிகாரிகள் முதல் டிஜிபி வரை நவீனத் தொழில்நுட்பம் மற்றும் புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் காவல் தலைமையகத்தில் நடைபெற்ற 58 வது டிஜிபி மாநாட்டில் பங்கேற்ற அமித் ஷா, தகவல் தரவுகளை ஒன்றாக இணைப்பதும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதும் அவசியம் என்று கூறினார்.அவசர கால பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள அது உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்யும் என்று குறிப்பிட்ட அமித் ஷா, குற்றவியல் நடவடிக்கைகளை மிகவும் நவீனமயமாக்கும் என்றும் தெரிவித்தார்
Comments