இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை ஐசிசி வெளியீடு... இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஜூன் 9-ஆம் தேதி பலப்பரீட்சை..!

0 18325

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் இந்த ஆண்டு நடைபெற உள்ள இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

ஜூன் ஒன்றாம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட மொத்தம் 20 அணிகள் கலந்துகொள்கின்றன.

முதன்முறையாக 20 அணிகள் பங்குபெறும் நிலையில், அவை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியாவும் பாகிஸ்தானும், ஜூன் 9-ஆம் தேதி லாங் தீவில் நடைபெறும் போட்டியில் மோதுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments