மகன்களை தாக்கிய போதை கணவரை தள்ளி விட்ட மனைவி.. தலையில் அடிபட்டு கணவர் பலி..

0 979

சென்னை, நுங்கம்பாக்கம் அருகே மதுபோதையில் தாக்க வந்த கணவரிடம் இருந்து தன்னை தற்காத்து கொள்வதற்காக, மனைவி அவரை தள்ளி விட்ட நிலையில், சுவற்றில் மோதி தலையில் காயமடைந்த கணவர் உயிரிழந்தார்.

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் காவலாளியாக வேலை செய்த பாலகிருஷ்ணன் என்பவர் குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவி கனகவல்லியையும், தனது இரு மகன்களையும் சரமாரியாக அடித்து உதைத்தபோது , கணவரை தடுத்த கனகவல்லி , தள்ளிவிட்டதில் சுவற்றில் மோதி தலையில் அடிபட்டு  பலியானார். 

அவரது மனைவி கனகவல்லியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments