மாநில டிஜிபிக்கள் மற்றும் ஐஜிக்களின் 58-வது மாநாடு இன்று ஜெய்ப்பூரில் தொடக்கம்... நாளை, நாளை மறுநாள் நிகழ்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்பு என தகவல்
மாநில டிஜிபிக்கள் மற்றும் ஐஜிக்கள் பங்கேற்கும் 58-ஆவது மாநாடு, ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில், இன்று தொடங்குகிறது. இதில், காவல் துறை மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான தொடர்பான விவகாரங்கள் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளன.
சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நிகழ்வுகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அவர் தவிர, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய உயர் அதிகாரிகள், மத்திய காவல் அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.
சமீபத்தில் கொண்டுவரப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்களின் அமலாக்கம், ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குல்கள், நக்ஸல் தீவிரவாதம், இணையவழி குற்றங்கள், சிறை சீர்திருத்தங்கள், செயற்கை நுண்ணறிவு, டீப்ஃபேக் சித்தரிப்புகளால் ஏற்படும் சவால்கள் உள்ளிட்டவை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று கருத்தப்படுகிறது.
Comments