9 மத்திய அமைச்சர்கள், 68 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் இந்த ஆண்டு முடிவடைகிறது
மத்திய அமைச்சர்களாக உள்ள 9 பேர் உள்பட மாநிலங்களவையில் உறுப்பினராக உள்ள 68 பேரின் பதவிக்காலம் இந்த ஆண்டு முடிவடைகிறது.
மத்திய அமைச்சர்கள் அஷ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான், பூபேந்திர யாதவ், மன்சுக் மாண்டவியா, வி. முரளீதரன், நாராயண் ரானே, புருஷோத்தம் ரூபாலா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோரின் பதவிக் காலம் இந்த ஆண்டு முடிகிறது.
அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 10 இடங்களும், மகாராஷ்டிரா மற்றும் பிகாரில் தலா 6 இடங்களும், மத்திய பிரதேசம், மேற்கு வங்கத்தில் தலா 5 இடங்களும், கர்நாடகா, குஜராத்தில் தலா 4 இடங்கள் மற்றும் 4 நியமன உறுப்பினர்கள் உள்பட மொத்தம் 68 இடங்கள் காலியாகும் என்றும், இதில் 57 இடங்கள் மக்களவைத் தேர்தலுக்கு முன் நிரப்பப்படும் என்றும் கூறப்படுகிறது.
Comments