வரிப் பகிர்வில் தமிழகத்திற்கு பாகுபாடு காட்டப்படவில்லை: நிர்மலா சீதாராமன்

0 1248

தமிழகத்தில் இருந்து பெற்ற வரியை விட தமிழகத்துக்கு மத்திய அரசு கூடுதலாகவே நிதி வழங்கியுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

சென்னை மேற்கு மாம்பலத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றில் பேசிய அவர், வரிப்பகிர்வில் தமிழகத்தின் மீது எந்த பாகுபாடும் காட்டப்படவில்லை என்றார்.

ஜி.எஸ்.டி வரி வசூல் நடைமுறைக்கு வந்த பின்னர் தங்களுக்கு உரிய முறையில் வரித்தொகை பகிரப்படவில்லை என சில மாநிலங்கள் கூறுவது தவறு என்று கூறிய அவர், துறை வாரியாக மத்திய அரசு எத்தனை கோடி ரூபாய் செலவிட்டது என பட்டியலிட்டார்.

வரி தொடர்பாக இன்னும் கேள்வி கேட்டாலும் பதில் அளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments