மனநலம் குன்றியவர் மீது ஓட்டுநர், நடத்துனர் தாக்குதல் .. இருவரையும் பணியிடை நீக்கம் செய்தது போக்குவரத்து கழகம்

0 1449

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே மனநலம் பாதிக்கப்பட்டவரை தாக்கிய விவகாரத்தில் பேருந்து ஓட்டுநர், நடத்துனரை பணியிடை நீக்கம் செய்து அரசு போக்குவரத்துக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் குலசேகரத்தில் இருந்து மார்த்தாண்டம் செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது நடத்துனர் காந்தி பயண சீட்டுக்கு பணம் கேட்டதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த ஓட்டுநர் பத்மகுமாரும், நடத்துனர் காந்தியும் மனநலம் பாதிக்கப்பட்ட மணிகண்டனை தாக்கிய வீடியோ இணையத்தில் பரவியதையடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments