ஆர்கன்சா வைரக் கற்களை தேடும் மக்கள்.. கண்டெடுப்பவரே வைத்துக்கொள்ள அனுமதி..!
அமெரிக்காவின் ஆர்கன்சா மாகாண அரசுப் பூங்காவில் கண்டெடுக்கப்படும் வைரக் கற்களை பார்வையாளரே வைத்துக் கொள்ள பூங்கா நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
ஜெர்ரி இவான்ஸ் என்பவர், 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமது தோழியுடன் அந்த பூங்காவிற்கு சென்றபோது, கண்ணாடி துண்டு போன்ற ஒன்றை கண்டெடுத்ததாக கூறப்படுகிறது.
அதனை ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அவர் அனுப்பியபோது, அது வைரம் என்பது தெரியவந்தது. 4 புள்ளி 87 காரட் கொண்ட அந்த வைரத்தை ஜெர்ரியே வைத்துக் கொள்ளலாம் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, வைரக் கற்களை தேடி அந்த பூங்காவுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
Comments