பணப் பிரச்சினையால் மனைவியை வெட்டிக் கொன்ற நபர்.. காட்டில் பதுங்கியவரை மடக்கிப் பிடித்த போலீசார்

0 1828

கோவில்பட்டி அருகே மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்று விட்டு விடிய விடிய சடலத்துடன் தங்கி இருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கீழபாண்டவர்மங்கலத்தில் பணம் வட்டிக்கு விடும் தொழில் செய்து வந்த இன்னாசி முத்துவின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாக அவரது மனைவியின் சகோதரர் சின்ன மருதுவுக்கு அக்கம் பக்கத்து வீட்டுக்கார்கள் தகவல் தெரிவித்தனர்.

அங்கு வந்து வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்த சின்ன மருது, தமது அக்காள் மருதம்மாள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு, கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றதாக கூறப்படுகிறது.

உள்ளே பதுங்கி இருந்த இன்னாசி முத்து, சின்ன மருதுவை வெட்டிவிட்டு தப்பி ஓடினார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், அருகே உள்ள காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்த இன்னாசி முத்துவை கைது செய்தனர்.

விஷம் குடித்துவிட்டதாக கூறிய இன்னாசி முத்துவை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில், சென்னையில் உள்ள தமது மகளுக்கு தமக்குத் தெரியாமல் பணம் கொடுத்தது தொடர்பாக தகராறில் மனைவியை வெட்டியதாக இன்னாசி முத்து வாக்குமூலம் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments