கோலியனூர் அரசு பள்ளியில் மதிப்பீட்டுக் குழு ஆய்வு செய்தனர்.. பள்ளி குறைகள் பற்றி மாணவிகளிடம் கேட்ட குழு தலைவர்
அரசு மதிப்பீட்டுக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர்.
மதிப்பீட்டு குழுத் தலைவர் சாக்கோட்டை அன்பழகன் எம்.எல்.ஏ., தலைமையில் குழுவினர் ஆய்வு மேற்கொண்ட போது, பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள குப்பையை ஏன் அகற்றவில்லை என்று கேள்வி எழுப்பினர்.
வட்டார வளர்ச்சி அதிகாரியை கடிந்து கொண்ட சாக்கோட்டை அன்பழகன், போண்டா டீ சாப்பிட வரவில்லை என்றார்.
வகுப்பறையில் போதிய பெஞ்சு இல்லாமல் மாணவிகள் கீழே அமர வைக்கப்பட்டது பற்றி பள்ளி தலைமை ஆசிரியை இடம் சாக்கோட்டை அன்பழகன் கேள்வி எழுப்பினார்.
மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட கல்வி அதிகாரி இடம் பள்ளி வளாகத்தில் சுற்றுச்சுவர் பிரச்சனை மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக அரசின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
Comments