உக்ரைனுடன் ரஷ்யா போர்தொடுத்த பின்னர் மிகப்பெரிய அளவில் இருநாடுகளும் நூற்றுக்கணக்கான போர்க் கைதிகளை பரிமாறிக் கொண்டனர்

0 785

உக்ரைனுடன் ரஷ்யா போர்தொடுத்த பின்னர் மிகப்பெரிய அளவில் இருநாடுகளும் நூற்றுக்கணக்கான போர்க் கைதிகளை பரிமாறிக் கொண்டன. 230 ரஷ்ய வீரர்களை விடுதலை செய்வதாக உக்ரைன் அறிவித்தது.

அதே போல் 248 உக்ரைன் வீரர்களை விடுவிப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.ஐக்கிய அரபு அமீரகத்தின் சமாதான முயற்சியின் பலனாக இருநாடுகளும் கைதிகளை விடுவிக்க ஒப்புக் கொண்டன.

ஏற்கனவே இதுபோல் கைதிகள் பரிமாற்றம் நடந்திருப்பதாக உக்ரைன் மனித உரிமை அதிகாரிகள் கூறுகின்றனர். ஆயினும் இதுவே மிகப்பெரிய அளவிலான பரிமாற்றம் என்றும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments