தமிழகம் முழுவதும் சுமார் 3 லட்சம் சாலைகள் மற்றும் தெருக்களில் உள்ள சொத்துக்களுக்கு புதிய கூட்டு மதிப்பை தமிழக அரசு வெளியீடு

0 1099

தமிழகம் முழுவதும் சுமார் 3 லட்சம் சாலைகள் மற்றும் தெருக்களில் உள்ள சொத்துக்களுக்கு புதிய கூட்டு மதிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதில், சென்னையில் மட்டுமே சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் சாலைகள் மற்றும் தெருக்கள் இடம் பெற்றுள்ளன.

சென்னை தேனாம்பேட்டை போட்கிளப் பகுதியில் உள்ள நிலம் மற்றும் கட்டடத்திற்கு அதிகபட்சமாக ஒரு சதுர அடிக்கு 28 ஆயிரத்து 500 ரூபாயும், குறைந்தபட்சமாக சென்னையின் புறநகர் பகுதியான தாம்பரம் பகுதிக்கு சதுர அடிக்கு 3 ஆயிரத்து 800 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இனிமேல், புதியதாக கட்டடத்தோடு நிலம் வாங்குபவர்கள் புதிய கூட்டு மதிப்பு அடிப்படையில் பத்திரப் பதிவு கட்டணமாக 7 சதவீதம் செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments