கடன் வாங்குவதில் தமிழகத்தை நம்பர் 1 மாநிலமாக ஆட்சியாளர்கள் மாற்றியுள்ளனர் என அண்ணாமலை குற்றச்சாட்டு

0 1057

கடன் வாங்குவதில் தமிழகத்தை நம்பர் 1 மாநிலமாக ஆட்சியாளர்கள் மாற்றி வைத்துள்ளதாகவும், இந்த கடனை அடைக்கவே 87 ஆண்டுகள் ஆகும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் என் மண் என் மக்கள் யாத்திரையில் பேசிய பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, மூலை முடுக்கெல்லாம் டாஸ்மாக் கடையை திறந்து வைத்து குடிகார மாநிலமாக மாற்றிய பெருமை தி.மு.கவையே சேரும் என கூறினார்.

கோவிலின் ஒவ்வொரு செங்கல்லும் இருக்கும் வரையில் சனாதனத்தை யாராலும் ஒழிக்க முடியாது என தெரிவித்த அண்ணாமலை, கோயில்கள் நமது வரலாற்றை பேசி வருவதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments