முன்னாள் பிரதமர் நேரு சீனாவுக்கு கூடுதலான முக்கியத்துவம் அளித்ததாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சனம்
முன்னாள் பிரதமர் நேரு சீனாவுக்கு கூடுதலான முக்கியத்துவம் அளித்ததாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சனம் செய்துள்ளார்.
அவர் அளித்த பேட்டி ஒன்றில், சர்தார் பட்டேலுக்கும் நேருவுக்கும் இடையே நிகழ்ந்த கடிதப் பரிமாற்றங்களை விளக்கியுள்ளார்.
இருவருக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் நிலவியதாகக் குறிப்பிட்டுள்ள ஜெய்சங்கர், ஐநா பாதுகாப்பு கவுன்சில் இடத்தை சீனாவுக்கு விட்டுக் கொடுப்பது தொடர்பாக அப்போதைய முதலமைச்சர்களுக்கு நேரு எழுதிய கடிதத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த காலங்களில் பாகிஸ்தான், சீனா மற்றும் அமெரிக்காவுடன் இந்தியாவின் உறவுகள் சேதம் அடைந்ததாகக் கூறிய அவர், இப்போதைய வலிமையான பாரதம் போல அன்றைய பாரதம் இருந்திருந்தால் சீனாவுக்கான முக்கியத்துவத்தைக் குறைத்திருக்க முடியும் என்றார்.
Comments