இண்டியா கூட்டமைப்பில் உள்ள எதிர்க்கட்சிகள் மக்களின் மத நம்பிக்கைகள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக மோடி விமர்சனம்
இண்டியா கூட்டமைப்பில் உள்ள எதிர்க்கட்சிகள் மக்களின் மத நம்பிக்கைகள் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும் நாட்டின் வளர்ச்சியைத் தடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
கேரள மாநிலம் திருச்சூர் அருகே நடைபெற்ற பாஜக மகளிர் மாநாட்டில் பேசிய மோடி, நமது நம்பிக்கை தாக்குதல் நடத்தும் எதிர்க்கட்சிகள், கோவில்களை தங்கள் கொள்ளையடிக்கும் இடங்களாக மாற்றிக் கொண்டதாகத் தெரிவித்தார்.
திரிச்சூர் பூரம் போன்ற திருவிழாக்களையும் அரசியலாக்கும் இடதுசாரி கேரள அரசையும் மோடி கடுமையாக விமர்சித்தார். சபரிமலையில் நிர்வாகக் கோளாறால் பக்தர்கள் கடும் சிரமத்துக்கு ஆளானதாகவும், கேரள அரசு செயலற்றுப் போய்விட்டதாகவும் மோடி தெரிவித்தார்.
Comments