யாருடா அவன்.. காருக்குள்ள இருந்து முரட்டு ஆளா ஒருத்தன் ஓடுறான். மாஸ்டர் பிளானால் கணவன் கொலை.. வீதிக்கு வந்த மனைவியின் விபத்து நாடகம்..
சென்னை அயனாவரத்தில் பழைய இரும்பு வியாபாரி கார் மோதிபலியான சம்பவத்தில் , திடீர் திருப்பமாக காரில் இருந்து தப்பி ஓடியவர் கொடுத்த தகவலின் பேரில், வியாபாரியின் மனைவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த பழைய இரும்பு வியாபாரி பிரேம்குமார், செவ்வாய்கிழமை இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது நியூ ஆவடி சாலையில் கார் மோதி பலியானார்.
போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்து வழக்கு பதிவு செய்து கார் உரிமையாளரை தேடி வந்தனர்.
விபத்தை நேரில் பார்த்தவர்கள் விபத்தை ஏற்படுத்திய காருக்குள்ளிருந்து இறங்கிய மர்ம நபர், விபத்தில் சிக்கியவர் அருகில் வந்து பார்த்து விட்டு, உதவி செய்யாமல் அவருக்காக காத்திருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிசென்றதாக தெரிவித்தனர்
விபத்தை ஏற்படுத்திய கார் குறித்து விசாரித்ததில் அயனாவரம் பகுதியை சேர்ந்த அரிகிருஷ்ணன் என்பவர் சமீபத்தில் olx மூலம் 60 ஆயிரம் ரூபாய்க்கு இந்த காரை வேறு ஒருவரிடம் இருந்து வாங்கி உள்ளது தெரியவந்துள்ளது.
அரிகிருஷ்ணனை தேடிய நிலையில் உயிரிழந்த பிரேம்குமாரின் சகோதரி , தனது சகோதரர் சாவு விபத்தாக இருக்க வாய்ப்பில்லை என்று புகார் தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக அவரது மனைவி ஷன்பிரியாவும் தந்து கணவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறி காவல் நிலையத்தில் கண்ணீர் வடித்தார்.
அரிகிருஷ்ணனை மடக்கிய போலீசார் அவர் செல்போன் மூலம் யார் யாருடன் பேசி உள்ளார் என்ற தகவலை சேகரித்த போது அவர்,கார் விபத்தில் பலியான பிரேம்குமார் மனைவி ஷன்பிரியா என்பவருடன் 30க்கும் மேற்பட்ட தடவை செல்போனில் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது.
பிரேம்குமார் உறவினர்களும் அவரது மனைவி ஷன்ப்பிரியாவின் நடவடிக்கை குறித்து சந்தேகம் எழுப்பியதால் அரிகிருஷ்ணனை பிடித்து விசாரித்த போது , காதல் கண்ணை மறைத்ததால் கணவனை தீர்த்துக்கட்டிய மனைவியின் விபரீத விபத்து நாடகம் வெளிச்சத்திற்கு வந்தது.
இதையடுத்து விபத்து வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு சட்டம் ஒழுங்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அரிகிருஷ்ணனுக்கும், பிரேம்குமார் மனைவி ஷன்பிரியாவுக்கும் திருமணம் கடந்த உறவு இருந்து வந்த நிலையில், இவர்களின் வில்லங்க காதல் விவகாரம் தெரிந்து ஷன்பிரியாவை சரமாரியாக தாக்கி வந்ததால் கணவர் பிரேம்குமாரை கொலை செய்ய காதலனுடன் சேர்ந்து அவர் திட்டமிட்டதாக கூறப்படுகின்றது.
அதன்படி பிரேம் குமார் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது காரால் மோதி கொலை செய்யலாம் என்று முடிவு செய்துள்ளனர்.
விபத்தை யார் ஏற்படுத்தினார் என்று அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக, 60 ஆயிரம் ரூபாய்க்கு பழைய கார் ஒன்றை olx மூலம் விலைக்கு வாங்கிய அரிகிருஷ்ணன், தனது பள்ளிக்கூட நண்பர் சரத்குமார் என்பவனை ஏவி காரால் மோதி கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த 2 செல்போன் போன் சிக்னல்களின் அடிப்படையில் அரிகிருஷ்ணனின் செல்போன் நம்பரை போலீசார் கண்டறிந்து அவனுடன் பேசியவர்களை வைத்து இந்த கொலை சம்பத்தை துப்பு துலக்கி உள்ளனர்.
கணவரை கார் ஏற்றிக் கொன்ற வழக்கில் மனைவி ஷன்பிரியாவையும், காதலன் ஹரி கிருஷ்ணனையும் கைது செய்த போலீசார் , காரை ஓட்டி வந்த சரத்குமார் என்பவரை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் போக்குவரத்து புலணாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் சிவக்குமார் திறமையாக துப்பு துலக்கியதால் கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
Comments