அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் பிரசவத்திற்கு பின் கர்ப்பிணி உயிரிழப்பு.. தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக உறவினர்கள் போராட்டம்

0 807

காஞ்சிபுரம் மாவட்டம் மானாமதி அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் கர்ப்பிணியும், அவருக்கு பிறந்த குழந்தையும் உயிரிழந்ததிற்கு தவறான சிகிச்சையே காரணம் எனக்கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி சத்யாவுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில், இறந்தே குழந்தை பிறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது, சத்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததால், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சந்தேக மரணம் என்ற பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், செங்கல்பட்டு ஆர்.டி.ஒ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments