லட்சத்தீவில் ரூ.1,200 கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

0 848

உலக கடல் உணவுகள் சந்தையில் இந்தியா தனது பங்களிப்பை அதிகரிப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

லட்சத்தீவின் காவரட்டியில் ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

இணையதள வேகத்தை நூறு மடங்கு வரை உயர்த்தும் வகையிலான கொச்சி - லட்சத்தீவு இடையிலான கடலடி பைபர் ஆப்டிக் திட்டம், அகத்தி மற்றும் மினிக்காய் தீவுகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கும் திட்டங்களும் அதில் அடங்கும்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், கடந்த 10 ஆண்டுகளாக தமது அரசு, தொலைதூர மாநிலங்கள், எல்லைப் பகுதிகள், தீவுகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து வருவதாக கூறினார்.

நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதே மத்திய அரசின் முக்கிய நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, மத்திய அரசின் திட்டங்களின் பயனாளிகளுடன் கலந்துரையாடிய பிரதமர், வளர்ச்சித் திட்டங்கள் தொலைதூரத்தில் வாழும் மக்களையும் சென்று சேர்ந்திருப்பதை அறிந்தபோது திருப்தி ஏற்பட்டதாக சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments