பணி மற்றும் கல்விக்காக அமெரிக்கா செல்லும் மக்களுக்கு விசா நடைமுறையில் புதிய விலக்கு

0 912

பணி மற்றும் கல்வி நிமித்தமாக அமெரிக்காவுக்கு செல்ல விரும்புவோருக்கான விசா நடைமுறைகளில் அமெரிக்க வெளியுறவுத்துறை சில விலக்குகளை அறிவித்துள்ளது.

ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிமுறைப்படி, Non Immigrant விசா பெற்றிருப்பவர்கள் 48 மாதங்களுக்குப் பின் விசாவை புதுப்பிக்கும் போது நேர்காணலில் பங்கேற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க விசா-விலக்கு பெற்ற நாடுகளிலிருந்து முதல் முறையாக விண்ணப்பிப்பவர்கள் கட்டாயம் நேர்காணலுக்கு செல்ல வேண்டும் என்றும், தூதரக அதிகாரிகள், உள்ளூர் நிலைமையை ஆராய்ந்து அதன்படி முடிவு எடுப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments