குழந்தை சாப்பாடு கேட்குது வைக்காமல் திமிரா பேசராங்க.. கோவில் பணியாளர் அன்னதான அட்ராசிட்டி

0 1147

கோவை சரவணம்பட்டி அடுத்த கரட்டுமேடு முருகன் கோவிலில் அன்னதானத்தில் சாப்பிட அமர்ந்தவர்களுக்கு சாப்பாடு வழங்காமல் அவதூறாக பேசியதாக கோவில் பணியாளர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சம்பந்தப்பட்ட பணியாளரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது

அன்னதானத்தில் சாப்பிட அமர்ந்த சிறுவனுக்கு சாப்பாடு கொடுக்க மறுத்து வாக்குவாதம் செய்த புகாருக்குள்ளான கோயில் பெண் பணியாளர் இவர் தான்..!

கோவை மாவட்டம் சரவணம்பட்டி அருகில் இந்து சமய அற நிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கரட்டுமேடு முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஞாயிற்றுக்கிழமை குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய சென்ற பக்தர் ஒருவர், அங்கு கோவில் நிர்வாகம் சார்பில் தினமும் 50 பேருக்கு அன்னதானம் வழங்குவதாக தகவல் அறிந்து குடும்பத்துடன் சாப்பிடச்சென்றுள்ளார்.

அங்கு உணவு பரிமாற வந்த இரு பெண் ஊழியர்கள் யாருக்குமே சரிவர உணவு பரிமாறாமல், பக்தர்களை இழிவுபடுத்தும் விதமாக பேசி வந்ததாக கூறப்படுகின்றது. முதலில் கொஞ்சமாக சாப்பாடு வைத்த நிலையில் அதனை சாப்பிட்டு விட்டு ஒரு பெண் மற்றும் சிலர் சாப்பாடு என்று கேட்டுக் கொண்டே இருக்க, பெண் பணியாளர்கள் கேட்காத மாதிரி சென்றதாக கூறப்படுகின்றது.

அபோது ஒரு குழந்தை மறு சாப்பாடு கேட்டதற்கு அதெல்லாம் போட முடியாது எழுந்து போ.. என்று கூறியதால் ஆத்திரம் அடைந்த பக்தர் தனது செல்போனில் வீடியோ எடுத்தபடி அந்த பெண் ஊழியரிடம் இப்போ சொல்லுங்கள் என்று கூற சுதாரித்துக் கொண்டு நான் அப்படி சொல்லவில்லையே என்று பெண் ஊழியர் சமாளித்தார்

அந்த பெண் ஊழியர் மீண்டும், யாரிடம் வேண்டுமென்றாலும் சொல்லுங்கள் யாராலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது தேவை என்றால் தின்னுங்கள் இல்லையென்றால் வெளியே செல்லுங்கள் என்று அனைவரிடத்திலும் மிகவும் திமிராக கூறியதால் பர பரப்பு உண்டானது

இதனால் பலர் உணவருந்தாமல் இலையில் பரிமாறப்பட்ட உணவை அப்படியே வைத்துவிட்டு வெளியேறி கோவில் நிர்வாகத்தில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அதிகார தோரணையில் பேசி அன்னதானத்துக்கு சென்ற பக்தர்களை நோகடித்த பெண் ஊழியரிடம் விளக்கம் கேட்டு கோவில் அறங்காவலர் புகழேந்தி நோட்டீஸ் வழங்கியுள்ளதாக தெரிவித்தார்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments