டெஸ்லா நிறுவனத்தின் சைபர் டிரக்கை அமெரிக்க காவல்துறை பயன்படுத்த எலான் மஸ்க் அனுமதி

0 713

டெஸ்லா நிறுவனத்தின் சைபர் டிரக்கை அமெரிக்க காவல் துறை பயன்படுத்துவதற்கு தமக்கு நூறு சதவீதம் சம்மதம் என்று அந்நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்தார்.

சைபர்டிரக் வாகனங்களை முன்பதிவு செய்திருந்த முதல் தொகுதி வாடிக்கையாளர்களுக்கு அண்மையில் வாகனங்கள் விநியோகிக்கப்பட்டன. அதில் ஒரு வாகனத்தின் முன்பு நின்று ரோசன்பெர்க் நகர போலீஸ் அதிகாரி நிழற்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

பழைய போலீஸ் வாகனங்களுக்கு மாற்றாக நவீன வாகனங்கள் தேவைப்படுவதாகவும் அதற்கு சைபர்டிரக் வாகனம் பொருத்தமா? என்றும் அந்த அதிகாரி கேள்வி எழுப்பினார். இந்த ஆலோசனையை முற்றிலும் ஏற்பதாக எலான் மஸ்க் 100 எமோஜி மூலம் பதிலளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments