மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வலி நிவாரண மாத்திரைகளை விற்க கூடாது சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை

0 6019

மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்யும் மருந்தக உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ககந்தீப் சிங் பேடி எச்சரித்துள்ளார்.

வலி நிவாரண மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து, சிரிஞ்ச் மூலம் உடலில் செலுத்திய 2 பேர் அண்மையில் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு கல்லூரி மாணவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

போதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்துவோரை பிடித்து விசாரித்து அவற்றை விற்பனை செய்வோரை கைது செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.

மேலும், கொரியர் மூலம் வெளிமாநிலங்களில் இருந்து  போதை மாத்திரைகள் கடத்திவருவதை தடுக்க நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments