ஜப்பானில் பயணிகள் விமானம் மீது மோதிய கடலோர காவல்படை விமானத்தின் கருப்பு பெட்டியை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை
ஜப்பானில் நேற்று பயணிகள் விமானம் மீது மோதி தீப்பற்றி எரிந்த கடலோர காவல்படை விமானத்தின் கருப்பு பெட்டியை கைப்பற்றிய அதிகாரிகள், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
ஜப்பானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண பொருட்களை கொண்டு செல்வதற்காக ஹனெடா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட கடலோர காவல்படை விமானம், உரிய அனுமதி பெற்று தரையிறங்க வந்த பயணிகள் விமானம் மீது மோதி இரு விமானங்களும் தீப்பற்றி எரிந்தன.
பயணிகள் விமானத்தில் இருந்த 379 பேரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட நிலையில், கடலோர காவல்படை விமானத்தில், விமானியை தவிர மற்ற 5 ஊழியர்களும் தீயில் கருகி உயிரிழந்தனர். தீப்பற்றி எரிந்த விமானங்களை அகற்றும் பணிகள் முழுவீச்சில் நடந்துவருகின்றன.
Comments