இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் ஹமாஸ் துணை தலைவர் பலி... தாக்குதலை கண்டித்து பாலஸ்தீனர்கள் பேரணி

0 1237

ஹமாஸ் அமைப்பின் துணை தலைவர் சாலே அல்-அரெளரி இஸ்ரேல் வான் தாக்குதலில் கொல்லப்பட்டதை கண்டித்து பாலஸ்தீனர்கள் அதிகம் வசிக்கும் நகரங்களில் பேரணிகள் நடைபெற்றன.

ஹமாஸின் ராணுவ பிரிவை தோற்றுவித்ததில் முக்கிய பங்காற்றியதாக கருதப்படும் அல்-அரெளரி குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம் வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தது.

லெபனான் தலைநகர் பெய்ரூட் அருகே, ஹெஸ்பொல்லா போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த குடியிருப்பு பகுதியில் இயங்கிவந்த ஹமாஸ் அலுவலகத்தை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் அரெளரி உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments