புதிய குற்றவியல் சட்டத்துக்கு எதிரான லாரி ஓட்டுநர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்
மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா தலைமையிலான குழுவுடன் லாரி ஓட்டுனர்கள் சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தற்காலிகமாக திரும்பப் பெறுவதாக லாரி ஓட்டுனர்கள் அறிவித்துள்ளனர்.
சாலையில் உயிரிழப்பை ஏற்படுத்திச் செல்லும் வாகன ஓட்டுனர்களுக்கு பத்து ஆண்டு சிறைத்தண்டனை, அதிக அபராதம் விதிக்கும் புதிய சட்டத்திருத்தத்திற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் லாரி ஓட்டுனர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். தனியார் பேருந்துகள் மற்றும் ஆட்டோ டாக்சிகளின் ஓட்டுனர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றதால் போக்குவரத்து முடங்கியது.
இந்நிலையில் லாரி ஓட்டுனர்கள் சங்கத்தினருடன் மத்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. புதிய விதிமுறைகள் இன்று அமல்படுத்தப்படவில்லை என்றும், அவ்வாறு அமல்படுத்தும் முன்பு ஓட்டுனர்களின் கருத்துகளை கேட்டு முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்தது. லாரி ஓட்டுனர்கள் வேலைநிறுத்தத்தைக் கைவிடும் படி கேட்டுக் கொண்டுள்ளது.
Comments