ஜப்பானில் நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள், கட்டடங்கள் மற்றும் சாலைகள் கடும் சேதம்
ஜப்பானில் நேற்று மாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
இஷிகாவா மற்றும் நிகாட்டா மாகாணங்களை மையமாகக் கொண்டு 7.6 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் குலுங்கின. பெரும்பாலான சாலைகள் சேதமடைந்தன.
பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் வாஜிமா நகரின் மையத்தில் பெரிய அளவில் தீவிபத்து ஏற்பட்டது.
இதில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளும் கட்டடங்களும் எரிந்து சேதமாயின. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ராணுவத்தினர், தீயணைப்புப் படையினர், போலீஸார் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக ஜப்பான் பிரதமர் ஃபூமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரம் மீண்டும் நிலநடுக்கம் நிகழ வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு நிலநடுக்க ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Comments