அமைதிக்கான நோபல் பரிசு வென்ற முகம்மது யூனுஸ்...6 மாத கால சிறை விதித்த நீதிமன்றம்

0 1378

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற வங்க தேசத்தைச் சேர்ந்த முகம்மது யூனுஸ் உள்ளிட்ட 4 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆறு மாத சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

கிராமின் டெலிகாம் தலைவராக பதவி வகித்தபோது, தொழிலாளர் நல நிதியை உருவாக்கத் தவறியதாக முகம்மது யூனுஸ் மற்றும் மூன்று ஊழியர்களுக்கு எதிராக வங்கதேச தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் முகமது யூனுஸ் உள்ளிட்ட 4 பேருக்கும் தலா 6 மாத சிறைத்தண்டனையும், 25,000 டாகா அபராதமும் விதித்தது.

4 பேரும் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை பரிசீலித்த நீதிமன்றம், ஒரு மாதம் ஜாமீன் வழங்கியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments