புத்தாண்டு பொலிவு பெற பூஜைகள்.. பிரார்த்தனைகள்..! முக்கிய கோயில்களில் நடந்த சிறப்பு வழிபாடுகள்
தமிழ்நாடு முழுவதும் கோயில்களில் வழிபாடு நடத்தி பொதுமக்கள் புத்தாண்டை துவங்கினர்.
புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு முழு முதற் கடவுளாக கருதப்படும் விக்னேசரை தரிசிக்க பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் ஏராளமானோர் குவிந்தனர்
திருச்சி மலைக்கோட்டையில் புத்தாண்டை முன்னிட்டு செங்கரும்பினால் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் மாணிக்க விநாயகர் தங்க சூரிய பிரபை வாகனத்தில் காட்சியளித்தார்.
புதுச்சேரி மணக்குள விநாயகர் ஆலயத்தில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு தங்க கவசத்தில் காட்சி அளித்த விநாயகரை ஏராளமானோர் வழிபட்டனர்.
சிதம்பரம் கோயிலில் நடராஜர் சன்னதியில் 21 தீக்ஷதர்கள் வேத மந்திரங்கடிள முழங்க மகா ருத்ர யாகம், கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வமேத பூஜை ஆகியவை நடைபெற்றன.
தஞ்சை பெரிய கோயிலில் பெருவுடையாருக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அண்ணாமலையார் கோயிலில் உற்சவ மூர்த்திக்கு வெள்ளிக் கவசம் சாற்றப்பட்டு சிறப்பு தீப ஆராதனைகள் நடைபெற்றன.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் அதிகாலை நாலரை மணி முதல் குடும்பத்துடன் குவிந்த ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர்.
மேல்மலையனூரில் அங்காளம்மனுக்கு நடத்தப்பட்டு புத்தாண்டு சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பங்கேற்றனர்.
ஸ்ரீரங்கம் கோயிலில் ராப்பத்து நிகழ்வின் 8-ஆம் நாளில் சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்ட நம்பெருமாளை புத்தாண்டை முன்னிட்டு ஏராளமானோர் தரிசித்தனர்.
சென்னை தி.நகர் திருப்பதி தேவஸ்தான கோயிலின் புத்தாண்டு சிறப்பு பூஜைகளில் திரளானோர் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனர்.
சென்னை வடபழனி கோயிலில் முருகப் பெருமானுக்கு செய்யப்பட்ட புத்தாண்டு சிறப்பு அபிஷேகத்தை ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய அறுபடை வீடுகளிலும் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
நாமக்கல் விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு புத்தாண்டை முன்னிட்டு 7 டன் மலர்களைக் கொண்டு புஷ்பாஞ்சலி நடைபெற்றது.
Comments