அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இணைந்து பணியாற்றத் தயார் - சீன அதிபர் ஷி ஜின்பிங்
அமெரிக்காவுடன் நிலையான இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இணைந்து பணியாற்றத் தயார் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறியுள்ளார்.
அவ்விரு நாடுகளுக்கு இடையே தூதரக உறவுகள் துவங்கியதன் 45-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஜின்பிங் வெளியிட்டுள்ள செய்தியில், சீனா மற்றும் அமெரிக்க உறவுகளை நிலையாக, ஆரோக்கியமானதாக மற்றும் நீடித்ததாக வளர்த்தெடுக்க பலன்தரக்கூடிய செயல்பாடுகளை இரு நாடுகளும் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சீனா மற்றும் அமெரிக்க மக்கள் பலனடையும் வகையிலும் உலக அமைதி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்தவும் ஜோ பைடனுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் ஜின்பிங் குறிப்பிட்டுள்ளார்.
Comments