இந்தியாவின் மிகப்பெரிய கடல்பாலத்தை ஜனவரி 12ம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
மும்பையின் துறைமுக இணைப்பு ஆறு வழிச்சாலையை பிரதமர் மோடி வரும் 12ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார் .
இந்தியாவின் மிகப்பெரிய கடல் பாலமான இது சுமார் 22 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பாந்த்ரா முதல் வோர்லி வரை கடல்பாலம் இருக்கும் நிலையில் அதன் தொடர்ச்சியாக, இந்த புதிய இணைப்புப்பாலம் திறக்கப்படுகிறது.
இதன் மூலம் மும்பையின் சேவ்ரியில் இருந்து ராய்காட் மாவட்டத்தின் நவசேவா பகுதி வரையிலான சாலைப் போக்குவரத்து நேரம் வெகுவாகக் குறையும் என்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளின் தொழில் வளர்ச்சிக்கு உதவும் என்றும் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
Comments