இளைய தலைமுறையால் புதிய இந்தியா மலர்ந்துக் கொண்டிருக்கிறது - அமைச்சர் ராஜ்நாத்சிங்

0 639

இளைஞர்களால் புதிய இந்தியா மலர்ந்துக் கொண்டிருப்பதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

அஸ்ஸாம் மாநில் தேஜ்புர் பல்கலைக்கழகத்தின் 21வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசிய அவர், பழைய பாரத்துக்கும் புதிய பாரதத்துக்குமான வேறுபாடுகளை சுட்டிக் காட்டினார்.

மாணவர்கள், இளைஞர்களிடம் நிறைய கற்றுக் கொள்ள முடியும். அவர்களிடம் புதிய படைப்பாற்றல் உள்ளது. புதிய சிந்தனை உள்ளது.பழைய இந்தியா இருக்கட்டும் போகட்டும் விடு என்ற மனப்போக்கு கொண்டிருந்தது.

ஆனால் புதிய பாரதம் இன்னும் இதனை சகித்துக் கொண்டிருக்க முடியாது என்று உறுதி கொண்டிருக்கிறது.பிரதமர் மோடி தலைமையில் நாம் செய்து முடிப்போம் என்று இந்தியா எழுச்சி பெற்றுள்ளதாகவும் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments