ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு: குளங்கள், சடையனேரி வாய்க்காலில் உடைப்பு... குளங்களை தூர்வாரி, கற்களைப் பதித்து கரைகளைப் பலப்படுத்த விவசாயிகள் கோரிக்கை

0 702

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுப் பகுதியில் உள்ள 25-க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் சடையனேரி வாய்க்காலில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட உடைப்புகளால் அவை தண்ணீர் இல்லாமல் காட்சியளிக்கின்றன.

ஸ்ரீவைகுண்டம் தடுப்பணைகளில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், ஏரல் பகுதியில் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது.

சாத்தான்குளம் பகுதியில் உள்ள 89 குளங்களில் புத்தன்தருவை, வைரவம்தருவை போன்ற ஒருசில குளங்களில் மட்டுமே ஓரளவு தண்ணீர் உள்ளதாகவும், மற்றவற்றில் உடைப்பு காரணமாக தண்ணீர் இல்லாமல் காணப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அணைக்கட்டுக்கு மேல்பகுதியில் உள்ள 25க்கும் மேற்பட்ட பெரிய குளங்கள் மற்றும் சடையனேரி வாய்க்காலில் பல்வேறு உடைப்பு ஏற்பட்டு முழுமையாக தண்ணீர் இல்லாமல் காட்சியளிக்கிறது.

 


(( ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி ))

((

ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு: குளங்கள், சடையனேரி வாய்க்காலில் உடைப்பு

மழை வெள்ளத்தால் கரைகள் உடைந்ததால் நீரின்றி காட்சி அளிக்கும் நீர் நிலைகள்

குளங்களை தூர்வாரி, கற்களைப் பதித்து கரைகளைப் பலப்படுத்த விவசாயிகள் கோரிக்கை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments