"கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை" - ஓட்டப்பிடாரம் பகுதி விவசாயிகளின் கண்ணீர் கதை
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள குளங்கலில் 40 சதவீதம் முற்றிலுமாக சேதம் அடைந்தும், 20சதவீதம் பகுதி அளவு சேதம் அடைந்தும் தண்ணீர் வெளியேறி வருகிறது.
குறிப்பாக ஓட்டப்பிடாரம் ஊராட்சியில் 15 குளங்களும், கருங்குளும் ஊராட்சியில் 25 குளங்களும், விளாத்திகுளம் ஊராட்சி பகுதியில் 7 குளங்களும் முற்றிலுமாக சேதம் அடைந்து காணப்படுகிறது.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல வரலாறு காணாத மழை பெய்தும் குளங்களில் இந்த தண்ணீர் வெளியேறியது விவசாயிகளை மிகவும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
அரசு அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் மனு கொடுத்தும் ஓட்டப்பிடாரம் பகுதியில் உள்ள பல்வேறு குளங்களில் தூர் வாரும் பணிகளோ,மதகுகள் சரி செய்வது, கண்மாய் கரையை பலப்படுத்துவது என்ற எவ்வித அடிப்படை கட்டமைப்பு பணிகளும் நடக்கவில்லை என்பதால் தான் இன்றைக்கு இந்த சூழ்நிலை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
Comments