டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை 5 ஆண்டுகளில் 147 சதவீதம் அதிகரிப்பு.. 2022-23ல் ரூ.139 லட்சம் கோடி அளவுக்குப் பணப்பரிவர்த்தனை - ஆர்பிஐ
கூகுள் பே, பேடிஎம், போன்பே உள்ளிட்டவை மூலமான மின்னணு யுபிஐ பணப்பரிவர்த்தனை கடந்த ஐந்து ஆண்டுகளில் 147 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2017-18-ஆம் ஆண்டில் 92 கோடியாக இருந்த பணப் பரிவர்த்தனை, 2022-23-ஆம் ஆண்டில் 8 ஆயிரத்து 375 கோடியாக அதிகரித்துள்ளது.
2022-23-ஆம் ஆண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட மின்னணு பணப் பரிவர்த்தனையில் யுபிஐ மூலம் மட்டும் 62 சதவீதம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
2017-18-ஆம் ஆண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்குப் பணம் பரிவர்த்தனை செய்யப்பட்ட நிலையில், 2022-23-ஆம் ஆண்டில் 168 சதவீதம் அதிகரித்து 139 லட்சம் கோடி ரூபாய் அளவுக்குப் பணம் பரிவர்த்தனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்சென்டிவ் உள்ளிட்ட சலுகைகளால் யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ள மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
Comments