ஜனவரி 22-ஆம் தேதியன்று பக்தர்கள் அயோத்திக்கு வர வேண்டாம்: பிரதமர்
அயோத்தியில் 1,450 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். 3 மாடிகள் கொண்ட ரயில் நிலையத்தின் வசதிகளையும் பிரதமர் பார்வையிட்டார்.
இதைத் தொடர்ந்து, டெல்லியில் இருந்து அயோத்திக்கு முதல் விமானம் வந்து இறங்கியது.
240 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்தையும் திறந்து வைத்த பிரதமர், கோவை - பெங்களூரு இடையேயான ரயில் உட்பட 6 வந்தே பாரத் ரயில்களையும், இரு அம்ரித் பாரத் ரயில்களையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து ரயிலில் பயணம் செய்த சிறுவர், சிறுமியர் உள்ளிட்டோருடன் பிரதமலை கலந்துரையாடினார்.
15 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கி வைத்த பின் உரையாற்றிய பிரதமர், அயோத்தி ஆலயத்தில் ராமர் சிலை நிறுவப்படும் ஜனவரி 22-ஆம் தேதியன்று பக்தர்கள் அயோத்திக்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். ராமர் ஆலயம் இனி எக்காலமும் நிலைத்திருக்கும் என்பதால், அவரவர் சவுகரியத்துக்கு ஏற்ப வேறு வருமாறு கேட்டுக்கொண்ட பிரதமர், 22-ஆம் தேதியன்று மக்கள் தங்கள் வீடுகளில் தீபமேற்றி தீபாவளி கொண்டாடுமாறு வலியுறுத்தினார்.
Comments