பிரேசில் நாட்டின் கால்பந்து ஜாம்பவான் பீலே நினைவிடத்தில் பிரேசில் மக்கள் திரண்டு அஞ்சலி
பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரராக திகழ்ந்த பீலே மரணம் அடைந்து ஓர் ஆண்டு நிறைவு பெற்றதை அடுத்து உலகம் முழுவதும் கால் பந்து ரசிகர்கள் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரித்து அஞ்சலி செலுத்தினர்.
பிரேசில் நாட்டின் அடையாளமாக கருதப்படும் பீலேவை கொண்டாடும் மக்கள், அவரது நினைவிடம் சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள பதக்கங்கள், கோப்பைகள் மற்றும் அவரது ஆடை மற்றும் கால்பந்துகளை பார்வையிட்டனர்
ரியோ டி ஜெனிரோவில் உள்ள ஏசுநாதர் சிலைக்கு பீலே அணிந்திருந்து ஜெர்ஸி அணிவித்து அவரை நினைவை கவுரவித்தனர். கால்பந்து வரலாற்றில் 1958, 1962, 1970-களில் நடந்த மூன்று உலகக்கோப்பைகளை வென்ற ஒரே வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
Comments