துவாரகாவில் நாட்டிலேயே முதன் முறையாக சுற்றுலாப் பயணிகளுக்காக நீர்மூழ்கிக் கப்பல் சேவையை அறிமுகப்படுத்தும் குஜராத் அரசு

0 1457

கடலுக்கு அடியில் தொலைந்துவிட்டதாக நம்பப்படும் பழங்கால நகரமான துவாரகாவில் நாட்டிலேயே முதன் முறையாக சுற்றுலாப் பயணிகளுக்காக நீர்மூழ்கிக் கப்பல் சேவையை அறிமுகப்படுத்த குஜராத் அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி, 2024 அக்டோபரில் தீபாவளிக்கு முன் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், கடலுக்கு அடியில் 100 மீட்டர் தூரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் நீர்மூழ்கிக் கப்பலில் அழைத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள சூழல் மற்றும் உயிரினங்களைப் பார்க்க வழி செய்யப்படும் என்று குஜராத் அரசு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு நீர்மூழ்கிக் கப்பலும் 24 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் என்றும் அனைத்து பயணிகளும் வெளியே உள்ளவற்றை பார்க்கும் வகையில் நீர் மூழ்கிக் கப்பல் வடிவமைக்கப்படும் என்றும் குஜராத் அரசு கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments