மத்திய அரசு, அஸ்ஸாம் மாநில அரசுடன் உல்ஃபா முத்தரப்பு ஒப்பந்தம்... ஒப்பந்தத்தால் வடகிழக்கு மாநிலங்களில் நிலவி வந்த வன்முறைக்கு முடிவு
அஸ்ஸாம் ஐக்கிய விடுதலை முன்னணி எனப்படும் உல்ஃபா அமைப்பினர் வன்முறையைக் கைவிடுவதாக மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் முத்தரப்பு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுத்து நிறுத்துதல், பழங்குடியின சமூகங்களுக்கு நில உரிமைகளை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதாகக் கூறப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் அஸ்ஸாமிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் நிலவி வந்த வன்முறை முடிவுக்கு வந்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டார்.
ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் இருந்து வெளியேறவும், நாட்டின் ஒற்றுமைக்கும் மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும் அமைதியான முறையில் பங்களிக்கவும் உல்ஃபா அமைப்பினர் ஒப்புக்கொண்டுள்ளதாக அமித் ஷா தெரிவித்தார்.
Comments