சீரியல் ஷூட்டிங்கில் நடிகைகள் சீரியஸ் பைட் சசிலயா தாக்கப்பட்டார்..! அங்கேயும் நாற்காலிக்கு சண்டையாம்..

0 2963

சென்னை தண்டலம் அருகே வீட்டில் நடந்த சீரியல் ஷூட்டிங்கின் போது நடிகைகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். மீனாட்சி பொண்ணுங்க என்ற தொடரின் ஷூட்டிங்கில் நடிகை சசிலயாவை, ஆர்த்தி ராம் பாய்ந்து தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது

 மீனாட்சி பொண்ணுங்க என்ற சீரியல் ஷுட்டிங்கில் நடிகைகளுக்கிடையே சீரியசாக நடந்த அடிதடி ரகளையின் காட்சிகள் தான் இவை..!

பகாசூரன் உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலிலும் முக்கிய வேடத்தில் நடித்திருப்பவர் நடிகை சசிலயா.

ஆரம்பத்தில் டிக்டாக்கில் தத்துவங்களை இலங்கை தமிழில் கொட்டி பிரபலமான சசிலயாவுக்கு , திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் வில்லி வேடம் தான் கிடைக்கிறது. இந்த நிலையில் சென்னை தண்டலம் தாரப்பாக்கத்தில் உள்ள நாச்சியார் ஹவுசில், மீனாட்சி பொண்ணுங்க என்ற சீரியல் ஷூட்டிங் நடந்துள்ளது.

இதில் சக நடிகைகளுடன் ஒரே ஷோபாவில் சசிலயா அமர்ந்திருந்த போது சீனியர் நடிகை ஒருவர் இருக்க இடம் கேட்டு சண்டையிட்ட தாகவும், சீனியர் நிற்கும் போது ஜூனியர் நடிகை இடம் தராமல் அமர்ந்திருகலாமா ? எனக்கேட்டு சசிலயாவை தாக்கியதாக கூறப்படுகின்றது

தான் தாக்கப்பட்டது குறித்து சசிலயா, இயக்குனரிடம் புகார் தெரிவித்துள்ளார்.இரு நடிகைகளும் தங்கள் செல்போனில் படம் பிடித்த படி சண்டையில் இறங்க சீரியசான சண்டையை சீரியல் இயக்குனர் புகுந்து சமாதானம் செய்து வைத்துள்ளார். படப்பிடிப்பில் தன்னை ஜூனியர் நடிகை போல நடத்துவதாகவும் இருக்க இடம் கொடுக்க வில்லை என்பதற்காக நடிகை ஆர்த்தி ராம், தன்னை பாய்ந்து தாக்கியதாகவும் சக கலைஞர்கள் தடுத்து காப்பாற்றியதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments