மத்திய பிரதேசத்தில் தனியார் பேருந்து லாரி மோதல்: 13 பேர் உயிரிழப்பு
மத்திய பிரதேச மாநிலம் குணா பகுதியில் தனியார் பேருந்து குப்பை லாரியின் மீது மோதி தீப்பிடித்து எரிந்ததில் 13 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 17 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
குணா-ஆரோன் சாலையில் நள்ளிரவில் விபத்து நடைபெற்றதாகவும், உடல்கள் தீயில் கருகியதால் டி.என்.ஏ பரிசோதனைக்குப் பிறகே இறந்தவர்களின் விபரங்கள் தெரிய வரும் என கூறிய குணா மாவட்ட ஆட்சியர் தருண்ரதி விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
Comments