ஐ.ஓ.சி. முனையத்தில் அடுத்தடுத்து வெடித்த 2 எத்தனால் டேங்க்குகள்.. ஒப்பந்த ஊழியர் ஒருவர் உடல் கருகி உயிரிழப்பு

0 1203

சென்னை தண்டையார்பேட்டை ஐ.ஓ.சி. நிறுவன முனையத்தில் 2 எத்தனால் டேங்க்குகள் வெடித்ததில் ஒப்பந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.

சர்க்கரை ஆலைகளில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் டேங்கர் லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் எத்தனால் எரிபொருள் அந்த முனையத்தில் தலா 70,000 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 டேங்க்குகளில் வைக்கப்பட்டுள்ளன.

இவற்றுள் இரு டேங்குகளை இணைக்கும் குழாயில் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனை வெல்டிங் செய்யும் பணியில் பெருமாள், சரவணன் உட்பட 6 ஊழியர்கள் ஈடுபட்டிருந்த போது பயங்கர சத்தத்துடன் இரு டேங்குகளும் அடுத்தடுத்து வெடித்தன.

வெல்டிங் செய்த பணியாளர்களில் பெருமாள் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார்.

சரவணன் என்ற மற்றொரு ஊழியர் 60 சதவீத தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பராமரிப்பு பணியின் பொழுது பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாததே விபத்துக்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments