மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு அஞ்சி வெளியேறும் ரோஹிங்கியா முஸ்லிம்கள்... தென்கிழக்கு ஆசிய நாடுகளை நோக்கி ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் ஆபத்தான கடல்பயணம்
மியான்மரில் ராணுவ ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்கு அஞ்சி சிறுபான்மை சமூகமான ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் மலேசியா, இந்தோனேசியாவுக்கு கடல் மார்க்கமாக பயணிப்பது அதிகரித்துள்ளதாக அகதிகளுக்கான ஐ.நா. ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆபத்தான கடல் பயணத்தில் போது கால்நடைகளை போல அடைத்து வைத்து அவர்கள் அழைத்துச் செல்லப்படுவதாகவும், பல நேரங்களில் விபத்து நேரிட்டு நடுக்கடலில் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் உயிரிழப்பதாகவும் ஐ.நா. ஆணையம் கூறியுள்ளது.
கடல் மார்க்கமாக பயணித்து இந்தோனேசியா சென்றடைந்த ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் சிலரை அந்நாட்டு காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களுக்கு கைவிலங்கு பூட்டி சட்டவிரோத செயலில் ஈடுபட்டதாக இந்தோனிய போலீசார் குற்றஞ்சாட்டினர்.
Comments