வீட்டில் பதுக்கப்பட்ட 300 கிலோ நாட்டு வெடிகளை பறிமுதல்... வெடிகளை சப்ளை செய்த நபரை தேடி வரும் போலீஸ்

0 1600

திருவிழா இறுதிச் சடங்கு போன்ற நிகழ்ச்சிகளுக்கு சப்ளை செய்வதற்காக வாலாஜாபேட்டையில் இருந்து நாட்டு வெடிகளை வாங்கி வந்து பதுக்கி வைத்திருந்த நபரை சென்னை நெசப்பாக்கத்தில் போலீசார் கைது செய்தனர்.

சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள தமது வீட்டில் செல்வகுமார் என்ற அந்நபர் நாட்டு வெடிகளை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் ஆய்வு செய்து 300 கிலோ நாட்டு வெடிகளை பறிமுதல் செய்தனர்.

அந்த வெடிகளை தற்காலிகமாக எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையம் அருகே இரு குழிகள் தோண்டி புதைத்து வைத்துள்ள போலீசார், விரைவில் கிழக்கு கடற்கரை சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கொண்டு சென்று செயலிழக்க வைக்கப்படும் என தெரிவித்தனர்.

வெடிகளை சப்ளை செய்ததாக வாலாஜாபேட்டையைச் சேர்ந்த அல்தாப் உசேனை போலீசார் தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments