காற்று மாசு படாத புனிதமான கங்கைக் கரை நகரம் ... இ-ரிக்சாக்கள் மூலமாக பயணிக்க விரும்பும் மக்கள்
வாரணாசியில் பெரும்பாலும் மின்சார வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
சுமார் 150 பேருந்துகள் மட்டுமே ஓடுகின்றன. 20 லட்சம் பேர் வாழும் வாரணாசியில் டீசல் பெட்ரோல் பயன்படுத்தாத மின்சார வாகனங்கள் மற்றும் படகுகளையே பயன்படுத்தி வருகிறோம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜலிங்கம் தெரிவித்துள்ளார்.
காசியும் கங்கையும் புனிதத் தலங்களாகக் கருதப்படுவதால் காற்றில் மாசு பரவுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இ ரிக்சாவின் விலை அதிகபட்சம் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை உள்ளது. இதன் மூலம் வேலையில்லாத இளைஞர்கள் பலருக்கு வேலைவாய்ப்பும் உருவாகின்றது.
Comments