உளுந்தூர்பேட்டையில் கூழாங்கற்களை கடத்தி வந்த லாரியை மடக்கிய அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அனுமதி இன்றி கூழாங்கல் ஏற்றி வந்த லாரியை மடக்கிய அதிகாரிகளை தாக்கிய கும்பலில் மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொக்காம்பாளையம் கிராமத்தில் அனுமதி இன்றி கூழாங்கற்கள் எடுத்து லாரிகளில் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து விழுப்புரம் பறக்கும் படை கனிமவளத்துறை உதவி இயக்குநர் ராமஜெயம் தலைமையில் நான்கு பேர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, கூழாங்கல் ஏற்றிக் கொண்டு வந்த லாரியை வழிமறித்தபோது, மற்றொரு லாரியில் வந்த 15 பேர் கொண்ட கும்பல் அதிகாரிகளின் கார் மீது கல் வீசி தாக்கியதாக கூறப்படுகிறது.
மேலும் கம்பி, கட்டைகளை கொண்டு தாக்கியதில் ராமஜெயம், புவியியலாளர் பாலசுப்பிரமணியன், சேகர் மற்றும் துரைராஜ் காயமடைந்த நிலையில், செல்போன்கள் மற்றும் 9 சவரன் தங்கச் சங்கிலியையும் பறித்துக் கொண்டு தப்பியதாக கூறப்படுகிறது.
Comments