வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் மத்திய அமெரிக்க நாடுகள்.. மெக்சிகோ வழியாக அமெரிக்கா சென்று தஞ்சமடைய நடந்தே செல்லும் மக்கள்
வறுமையில் சிக்கி தவிக்கும் மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் அமெரிக்காவில் தஞ்சமடைவதற்காக நடந்தே மெக்சிகோ வந்தடைந்தனர்.
குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்வாதாரம் தேடி அமெரிக்கா செல்வதாகவும், தினமும் 30 கிலோமீட்டர் தொலைவு நடந்துவருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்காவுக்கு புலம்பெயர தினமும் சுமார் 8000 பேர் மெக்சிகோ வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்க எல்லையை அடைவதற்கு முன் அவர்களை தடுத்து நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மெக்சிகோ தலைவர்களை இன்று சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
Comments