பயிர்களுக்கான கலப்பு உரத்தில் கடற்கரை மணல் கலப்பு.. மயில் மார்க் உர நிறுவனம் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு
சேலத்தில், கலப்பு உரம் என்ற பெயரில் பொட்டஷ், நைட்ரஜனுடன் கடற்கரை மணலை கலந்து விற்பனை செய்வதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
மயில் மார்க் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் பயிர்களுக்கான உரத்தை வாளியில் கொட்டி தண்ணீரோடு கலந்தால் மணல் மட்டுமே உள்ளது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது.
மயில்மார்க் உர நிறுவனம் மூடப்பட்ட நிலையில், விழுப்புரத்தை சேர்ந்த ஒருவர் அதே பெயரில் அனுமதிக்கப்பட்டதை விட அதிகளவில் மணலை கலந்து கலப்பு உரங்களை தயாரித்து விற்பனை செய்து வருவதாக தெரிவித்த விவசாயிகள், இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.
Comments